அரசியலில் நடிகர் விஜய்.. தமிழ் சினிமாவுக்கு இத்தனை கோடி இழப்பு ஏற்படுமா? வெளியான தகவல்!!

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரால் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் 2 நாட்களுக்கு முன்பாக தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டையும் தாண்டி விஜய் கட்சி ஆரம்பித்தது தேசிய ஊடகங்களிலும் விவாதத்தை கிளப்பியது. விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் GOAT படத்தை தொடர்ந்து, இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் அவர் நடிக்க உள்ளார். அதன் பின்னர் முழுவதுமாக அரசியலில் அவர் ஈடுபட உள்ளதால் இனி அவர் படங்களில் நடிக்கவே மாட்டார் என்று கருதப்படுகிறது.

இதனால் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் விஜய் நடிப்பில், கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதேபோன்று விஜய் நடிக்கும் படங்கள் ஓடிடி தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பும் போது அதிகமான பார்வையை (Viewership) பெறுகின்றன.

அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள் குறைந்தது ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒரேயடியாக நடிக்க மாட்டேன் என்று விஜய் அறிவித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு பல்வேறு வழிகளில் சுமார் ரூ. 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகினால் இந்த வர்த்தக முழுமையாக பாதிக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கம் GOAT படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக எச்.வினோத் அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ள விஜய், இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *