Actor Vijay: ‘இனி ஏறி அடிக்கப் போறேன்’ விஜய் எடுத்த அதிரடி முடிவு!
திரையுலகினர் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி பல்வேற விமர்சனங்களை, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதெல்லாம் அரசியல் சார்ந்தும், விமர்சனம் சார்ந்தும் இருக்கிறது. அது இருக்கட்டும், கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்காதது தான்,இப்போதைக்கு ஹாட் டாக்.
அஜித் பங்கேற்காதது, புதுமையல்ல. ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பில்லாத பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றியிருக்கிறார். அது அவருடைய பெருந்தன்மையாகவும் பார்க்கப்பட்டது. இந்த முறை கலைஞர் 100 நிகழ்ச்சியை விஜய் புறக்கணித்தது, சர்ச்சை ஏற்படுத்தியது என்று கூறுவதை விட, சரியான முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை தீவிரமாக அரசியலுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் விஜய், இனி எந்த அரசியல் கட்சிகளில் விழாக்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திமுக அரசின் மீதான சில விமர்சனங்களை கூர்ந்து கவனிக்கும் விஜய், இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், தன் இயக்கத்தின் செயல்பாட்டை அது பாதிக்கும் என்று அவர் விரும்புகிறார்.
நடிப்பு வேறு, அரசியல் வேறு என்று இரு நிலைப்பாட்டை இனி விஜய் எடுக்கப் போவதில்லையாம். மாறாக, இரண்டிற்கும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கப் போகிறாராம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் களம் காண்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வரும் அவர், எந்த ஒரு கட்சி சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்காமல், தான் தனியானவன் என்பதை வாக்காளர்களுக்கு சொல்ல முயற்சிக்கிறார் என்கிறார்கள்.
விஜய் எடுக்கும் இந்த முடிவு, உண்மையில் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள், அவுரது அபிமானிகள். அதே நேரத்தில், லியோவின் தான் சந்தித்த சில அரசியல் பிரச்னைகளும், வருங்காலத்திலும் அவை வரலாம் என்கிற நிலையிலும், அதை துணிந்து எதிர்கொள்ள தயாராகிவிட்டாராம் விஜய்.
இனி சிங்கப்பாதை தான் என்கிற முடிவிற்கு விஜய் வந்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அடுத்தடுத்து வரும் அரசியல் நகர்வுகளில் விஜயின் பங்களிப்பு அபரிவிதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வராதது, திமுக தலைமைக்கு கொஞ்சம் அப்செட் அளித்தது தான். ஆனால், அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது.
வரும் தேர்தலில் விஜய்யின் முழு நேர அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் தனித்து களம் காண்கிறாரா? அல்லது சேர்ந்து களம் காண்கிறாரா? அப்படியென்றால் அது யாருடன்? என்பது தான் இந்த முறை, அரசியல் களத்தை திருப்பிப் போடும் நிகழ்வாக இருக்கும்.