Actor Vijay: துவங்கியது GOAT படத்தின் அடுத்த ஷெட்யூல்.. வெங்கட் பிரபுவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்!

சென்னை: நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சிறப்பாக நடந்து வருகிறது.

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது சென்னையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் ராஜஸ்தான், துருக்கி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய தினம் GOAT படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. தற்போது படத்தில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோர் இணைந்துள்ள பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதையடுத்து தற்போது சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவிக்க தவறவில்லை. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் 600 கோடிகளை தாண்டி வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்த நிலையில் படம் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாகவும் அமைந்தது. படத்தில் ரசிகர்களை கவரும்வகையில் பல்வேறு சுவாரஸ்யங்களை இணைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

The greatest of all time படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அவரது 48வது படமாக உருவாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *