மனைவிக்கு பெட்டிக்கடையில் குச்சிமிட்டாய் வாங்கி கொடுத்த நடிகர் யாஷ்- வைரல் புகைப்படம்

நடிகர் யாஷ் தனது மனைவி ஆசைப்பட்டு கேட்ட குச்சிமிட்டாயை பெட்டிக்கடையில் வாங்கி கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் யாஷ்
KGF படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யாஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யாஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது “டாக்ஸிக்” எனும் படத்தில் நடித்து வரும் யாஷ் மீண்டும் பிரசாந்த் நீல் உடன் இணைந்து “KGF 3” படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், யாஷ் வட கன்னட மாவட்டத்தின் உள்ள சித்ரபூர் மாதா கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
வைரல் புகைப்படங்கள்
அப்போது தனது மனைவி ராதிகா பண்டித் அங்கிருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் குச்சி மிட்டாய் மீது ஆசைப்பட்டு கேட்டிருக்கிறார்.
மனைவி ஆசையை நிறைவேற்ற பெட்டிக்கடைக்கு வந்த யாஷ்ஷை பார்த்ததும் ரசிகர்கள் ஒன்று திரண்டு விட்டனர்.
அவருடன் ஆசையாகப் புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.