போலீஸ் மீது காரை ஏற்றியுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதா- மருத்துவமனையில் சோகம்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதை நோக்கி தான் கதை பயணித்து வருகிறது.
குணசேகரன் வீட்டு பெண்கள் கொஞ்சம் வெளியே வந்தால் அடி பலமாக விழுகிறது, இதனால் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிடுகிறார்கள்.
தற்போது கதையில் தர்ஷினியை யார் கடத்தி வைத்துள்ளார், ஈஸ்வரி விடுவிக்கப்படுவது எப்போது என நிறைய கேள்விகளுடன் தொடர் ஒளிபரப்பாகிறது.
மதுமிதா விபத்து
இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா.
இவர் அண்மையில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தன்னுடைய ஆண் நண்பரோடு காரில் பயணிக்கும் போது ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால் அந்த போலீசார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசார் நடிகை மற்றும் அவரது நண்பரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.