புடவையில் ஜொலிக்கும் நடிகை பிரியாமணி… இணையத்தை ஆக்கிரக்கும் புகைப்படங்கள்
நடிகை பிரியாமணி சேலை அணிந்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை பிரியாமணி
கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா மணி.
2006 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பொற்றார்.
தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த பிரியாமணி, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் நடித்த பிரியாமணி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.
அதன் பிறகு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கலக்கி வந்தார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.