நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம்… வருங்கால கணவருடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை!

டிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை திருமணம் செய்ய உள்ளார். இந்த ஜோடிக்கு நிச்சயமாக முடிந்து விட்டது.

விரைவில் நடைபெறவிருக்கும் திருமணம் குறித்த செய்திகள் உலா வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராகுலின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘அயலான்’ படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலருடன் கைகோர்க்கப் போகிறார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை ரகுல் காதலித்து வருகிறார். இந்த ஜோடி சில மாதங்களுக்கு முன்பு தங்கள் உறவை அறிவித்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.

கடற்கரைப் பின்னணி மற்றும் இயற்கைக் காட்சியுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் இணையத்தில் டிரெண்ட் ஆனது, இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், ரகுல் தனது வருங்கால கணவருடன் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *