Actress Rambha: கைவிடாத சாய்பாபா.. ‘என்ன புண்ணியம் பண்ணேனோ இவரு எனக்கு..’ – ரம்பா காதல் கதை!
நடிகை ரம்பா தன்னுடைய காதல் கதையை அண்மையில் சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பேசும் போது, “எனக்கு சாய்பாபா மீது மிகவும் பக்தி உண்டு. வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் உள்ளுக்குள்ளேயே சாய்பாபாவிடம்… பாபா எனக்கு நல்ல கணவன் வேண்டும் என்று அடிக்கடி வேண்டிக்கொள்வேன்.
ஒருமுறை சிகாகோவிற்கு சென்றிருந்த பொழுது, அங்கு காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது; அங்கு காதலை வெளிப்படுத்தும் வகையில் இருந்த ஒரு அட்டை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அம்மாவிற்கு தெரியாமல் நான் அதை வாங்கி பத்திரமாக வைத்திருந்தேன். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அந்த அட்டையில் ஐ லவ் யூ என்னுடைய வருங்கால கணவரே.. என்று எழுதுவேன். அந்த அட்டையை நான் இவருக்கு 2009இல் கொடுத்தேன்.
நான் முன்பு கொடுத்த பேட்டிகள் எல்லாவற்றிலும் எனக்கு என்ன மாதிரியான கணவன் வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு நான் என்னுடைய கணவர் கோட் சூட் அணிந்திருக்க வேண்டும். டை கட்டி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
அந்த வகையில் இவரை நான் பார்க்கும் பொழுது, இவர் நடந்து கொண்ட விதம், அவர் அவரை கையாண்டது, பேசியது உள்ளிட்டவை நான் எதிர்பார்த்தது போலவே இருந்ததால், நான் அப்படியே விழுந்து விட்டேன்” என்று பேசினார்.
கணவர் இந்திரன் பேசும் போது, “மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒரு முறை ரம்பா பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தார் அப்போது இவர், ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சில விஷயங்களை சொன்னார். அதை நானும் என்னுடைய உறவினர்களும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது அவர்கள், இந்த பெண்ணை நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று கேட்டார்கள். தயாரிப்பாளர் தாணுவும் இவரை பற்றி ஏற்கனவே என்னிடம் சொல்லி, அவரது வீட்டில் ரம்பாவை எனக்கு கட்டிக்கொடுக்கும் படி கேட்டு இருந்தார்.” என்றார்.
ரம்பா பேசும் போது, ” அதனை தெரிந்து கொண்ட நான், என்னுடைய அண்ணனின் போனை எடுத்து இவருக்கு அதிகாலை ஒரு மூன்று மணி அளவில் போன் செய்தேன். அப்போது இவரிடம் எனக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டேன். கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இவர் செல்ல வேண்டிய விமானத்தை எனக்காக விட்டு விட்டு பேசினார்” என்று பேசினார்.