பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை தன்யா..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம்.வரும் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் பிரபல நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் படத்தில் நடித்திருப்பது டீசர் வெளியானபோது கூட தெரியவர வில்லை. ஆனால், அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தன்யா பங்கேற்றிருந்தார். அப்போது தான் அவர் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஆர்.சி.பி கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக பேசி, சென்னை அணியை சாடிய பதிவு இணையத்தில் வைரலானது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக தன்யா பேட்டியளித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் இழிவு படுத்தி பேசிய நடிகையை லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தது தொடர்பாக கண்டனங்கள் எழுந்தன. மேலும், படத்திற்கு தடை விதிக்கக் கோரியும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புகள் கிளம்புவதை தொடர்ந்து, தன்யா மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் செய்யும் தொழில் மேல் சத்தியம், கடந்த சில நாட்களாக தமிழர்களை இழிவு படுத்தி நான் கூறியதாக வைரலாகும் கருத்து, நான் கூறியதே இல்லை. 12 வருடங்கள் முன்பு இதைப் பற்றி நான் பேசாமல் இருந்ததற்கு காரணம், எனக்கும், என் குடும்பத்திற்கும் வந்த அச்சுறுத்தல் தான் என தெரிவித்துள்ளார். நான் சினிமா பயணத்தை தொடங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *