கடுமையான மேல் முதுகு வலி: வரவிருக்கும் மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியா?

மாரடைப்பு என்பது முக்கிய இதயத் தமனிகளில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. இது திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

மாரடைப்புக்கு முன்னதாக உடலில் ஏற்படும் எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து உடனடி மருத்துவ உதவியை நாடினால் உயிர்களைக் காப்பாற்ற முடியும், என்று டாக்டர் ருசித் ஷா, (Interventional Cardiologist, Masina Hospital, Mumbai) முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் மாரடைப்புடன் தொடர்புடைய பொதுவான நெஞ்சு வலிகவலைப்பட வேண்டிய ஒரே அறிகுறியா?

மாரடைப்பு என்றால் என்ன?

இதய செயலிழப்பைத் தொடர்ந்து பொதுவாக மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது முக்கிய இதயத் தமனிகளில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. இது திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

நெஞ்சு வலி என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும் ஒருவர் உடலில் எங்கும் வலியை அனுபவிக்கலாம்.

இது முன் இடது அல்லது வலது தோள்பட்டை, இடது கை வலது கை, வயிற்றின் மேல் பகுதி, தாடை, கழுத்து, பின்புறம் இரண்டு தோள்பட்டைக்கு இடையில் அல்லது கன்னம் முதல் தொப்புள் வரை எங்கும் முன்புறம் அல்லது பின்பகுதியில் இருக்கலாம் என்று டாக்டர் ஷா கூறினார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதய பிரச்சினைகள் லேசான வலி அல்லது அசௌகரியத்துடன் தொடங்குகின்றன. மார்பு வலி என்பது மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் ஒருவர் புறக்கணிக்கக் கூடாத பல எச்சரிக்கை அறிகுறிகளில் கடுமையான முதுகுவலியும் உள்ளது என்று டாக்டர் ஜாகியா கான் (Senior Consultant-Interventional Cardiology, Fortis Hospital, Kalyan) கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *