தமிழ்நாட்டில் 42,768 கோடி முதலீடு செய்யும் அதானி.. நச்சுன்னு வந்த 4 முதலீடு..!!

மிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் இந்த 2 நாள் கூட்டத்தில் முடிவில் தமிழ்நாடு அரசு சுமார் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்கான முதலீட்டு விருப்பங்களைப் பெற்றுள்ளது என முக ஸ்டாலின் அறிவித்தார்.தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தது மூலம் 14,54,712 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், மறைமுகமாக 12,35,945 பேருக்கு வேலைவாய்ப்பு என மொத்தம் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அதானி குழுமம் தமிழ்நாடு அரசுடன் 42700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதானி குழுமத்தில் மொத்தம் 4 நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அதானி குழுமம் முதலீடு செய்யும் 42,768 கோடி ரூபாய் முதலீட்டில் அதிகப்படியான முதலீட்டா அதானி கிரீன் எனர்ஜி 24,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக அடுத்த 5-7 வருடத்தில் தமிழ்நாட்டில் 3 பம்பு ஸ்டோரேஜ் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.பம்ப் ஸ்டோரேஜ் ஹைட்ரோ பவர் (பிஎஸ்ஹெச்) என்பது ஒரு வகை நீர்மின் ஆற்றல் சேமிப்பு ஆகும். இது வெவ்வேறு உயரங்களில் உள்ள இரண்டு நீர் தேக்கங்களின் அமைக்கப்படுவது. இது ஒரு விசையாழி வழியாக நீர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வெளியேற்றும் போது ஆற்றலை உருவாக்க முடியும்.அதானி கானெக்ஸ்: அதானி குழுமத்தின் டேட்டா சென்டர் வர்த்தகமான Adani connex சென்னையில் சிறுசேரி சிப்காட்-ல் 33 மெகாவாட் செயல்திறன் கொண்ட டேட்டா சென்டரை அமைந்துளள்ளது. இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய டேட்டா சென்டர் அமைக்கவும், ஏற்கனவே சிறுசேரியில் இருக்கும் டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்யவும் 13,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதைத் தொடர்ந்து அதானி டோட்டல் கேஸ் அடுத்த 8 வருடத்தில் 1568 கோடி ரூபாயும், அம்புஜா சிமெண்ட் அடுத்த 5 வருடத்தில் 3,500 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.இந்த 42,768 கோடி ரூபாய் முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பரிமாறிக்கொண்ட போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *