அடேங்கப்பா.. 31 வயதில் இவ்வளவு சொத்துக்களா? கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் பார்க்கப்படுகிறார். இவர் முதல் முறையாக கோலிவுட் சினிமாக்களில் நடித்து தான் பிரபலமானார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படம் முதல் முதலில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து விக்ரம் பிரபு நடித்திருப்பார்.
கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா கோலிவுட்டில் பிரபலமான நடிகை என்பதால் கீர்த்திக்கு சினிமா வட்டாரங்களில் தனி மவுசு இருக்கின்றது.
சினிமாவிற்குள் வந்த ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த கீர்த்தி, ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) என்ற படத்தில் நடித்து தேசிய விருதை கைப்பற்றினார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், தற்போது கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் கீர்த்தியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றது.
இதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷிடம் ரூ. 45 கோடி வரை சொத்துக்கள் உள்ளன. அத்துடன் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 4 கோடி சம்பளம் வாங்கிறாராம்.
மேலும், சென்னையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள வீடு இருக்கிறது. மற்றும் Brand-new Volvo S90 – ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld – ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 – ரூ. 81 லட்சம்,Toyota Innova Crysta – ரூ. 25 லட்சம் உள்ளிட்ட பிராண்ட் கார்கள் வைத்திருக்கிறார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.