ஆதித்ய பிர்லா எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. இரு நிறுவனங்கள் மெகா இணைப்பு..!
ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (ABCL) மற்றும் ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் (ABFL) ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் குழு திங்களன்று இரு நிறுவனங்களையும் இணைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தன. இந்த இணைப்பு மூலம், பெரிய NBFC நிறுவனத்தை ஆதித்ய பிர்லா குரூப் உருவாக்க உள்ளது.
ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதன்மை முதலீட்டு நிறுவனம் (NBFC-CIC) ஆகவும், ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத முக்கியமான கடன் வழங்கும் நிதி நிறுவனம் (NBFC-ICC) ஆகவும் இருந்து வருகின்றன.
இந்த இணைப்புத் திட்டம் ஒப்புதலுக்காக ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பிற தேவையான அனுமதிகளைப் பெற பின்னர்த் தான் அதிகாரப்பூர்வமாக இணைப்புச் சாத்தியமாகும். இந்த இணைப்பு ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு மிகவும் முக்கியமானது, இந்த இணைப்பு ஆதித்ய பிர்லா கேப்பிட்டலின் குழு கட்டமைப்பை எளிமைப்படுத்துவதோடு பல்வேறு விதிமுறை நெருக்கடியிலிருந்து தப்புவதற்கு வழிவகுக்கும்.
ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (ABCL) மற்றும் ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் (ABFL) ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு இணைக்கும் முயற்சியாக ஆதித்ய பிர்லா குழுமம் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 30, 2025க்குள் ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் கட்டாயமாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்பிஐ நெருக்கடிக்கு இணங்கும்.
இந்த இணைப்புக்குப் பிறகு, தற்போது ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விஷாகா முல்யே, இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (MD & CEO) என்ற பதவியை ஏற்பார்.
ரமேஷ் சிங் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (NBFC) ஆகப் பணியாற்றுவார். இதற்கும் ஒழுங்குமுறை/சட்ட ஒப்புதல்கள் தேவைப்படும் என்பதால், இவர்களுடைய நியமனம் குறித்தும் பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்புக்குப் பிறகு, ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் ஒரு ஹோல்டிங் நிறுவனமாக இருந்து, ஆதித்ய பிர்லா ஃபைனான்ஸ் என்னும் NBFC நிறுவனத்தை இயக்கும்.