வேறொருவருடன் கள்ளத்தொடர்பு.. நைசாக மனைவியை கூட்டுட்டு போய் கணவர் என்ன செய்தார் தெரியுமா?
மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் கடலில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவை சேர்ந்த பிரபல தனியார் ஓட்டல் மேலாளராக கவுரவ் கட்டியார் (29) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு தீக்ஷா கங்வார் (27) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மனைவி தீக்ஷா கங்வாருக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் உள்ள கபோ டி ராமா கடற்கரை பகுதிக்கு, தன் மனைவி தீக்ஷாவை கவுரவ் அழைத்து சென்றார். அப்போது மனைவியுடன் கடலில் குளிக்க சென்ற கவுரவ் கட்டியார் திடீரென தீக்ஷா கங்வாரை கடலுக்குள் அழுத்தி கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல தனியாக திரும்பி வந்துள்ளார். அங்கிருந்த சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் கவுரவ் கட்டியாரிடம் விசாரித்த போது தனது மனைவி குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கடலில் தள்ளி கவுரவ் கொலை செய்தது, அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து கவுரவ் கட்டியாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் தீக்ஷா கங்வாருக்கும், வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் கணவர் கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால் மனைவியை கடலில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.