பொது இடங்களில் ஆபாச பொம்மைகளை வைத்து விளம்பரம்… சர்ச்சையில் சிக்கிய ஜப்பான்!

விலை உயர்ந்த ஆபாச பொம்மைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ததற்காக ஜப்பான் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஜப்பானில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான ஆபாச பொம்மைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது அவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஜப்பானில் உள்ள டொகுஷிமா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் நாளிதழான மைனிச்சி தெரிவித்துள்ளது. விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த பொம்மைகளுக்கு இண்டிகோ சாயம் பூசிப்பட்டுள்ளது. அது பாரம்பரிய இண்டிகோ சாயமிடுவதை விளம்பரம் செய்வதன் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதேபோல கடந்த 2017 ஆம் ஆண்டு விளம்பரத்துக்காக சுமார் 180 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இரண்டு பொம்மைகளை அதிகாரிகள் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு விளம்பரத்திற்காக அந்த ஆபாச பொம்மையை வாங்கிய அதிகாரி, அது மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மினாச்சியின் செய்தி அறிக்கையின் படி, ஆபாச பொம்மைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்ற கூற்று முற்றிலும் தவரானது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் விளம்பரத்திற்காக விலையுயரந்த பொம்மைகளை வாங்குவது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பொது இடங்களில் ஆபாச பொம்மைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் புரிதலை பெற முடியாது என தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த அதிகாரி ஒருவர், விளம்பரங்களுக்காக இண்டிகோ வண்ணம் பூசப்பட்ட பொம்மைகள் பயன்படுத்தப்படுவது எனக்கு தெரியும், ஆனால் அவை ஆபாச பொம்மைகள் பயன்படுத்துவது குறித்து எனக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதே போன்ற ஒரு சம்பவம் தான் ஆளுநராக இருந்தபோதும் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தை கடுமையாக கையாள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *