ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியானது

அகலமான இருக்கையுடன் இரு நபர்கள் அமர்ந்து செல்லவும் கூடுதலாக சுமைகளை பின்புறத்தில் ஏடுத்துச் செல்ல ஏற்றதாக வரவுள்ள புதிய ஏதெர் எனர்ஜி ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெர் (Ather Community Day) கூட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏதெர் தற்பொழுது வரை எந்த நுட்பவிபரங்களையும் வெளியிடவில்லை, ஆனால் தொடர்ந்து வெளியிடப்படுகின்ற டீசர்களில் மூலம் அகலமான மற்றும் சொகுசான நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்ற இருக்கை, அகலமான ஃபுளோர்போர்ட் உள்ளதால் முன்புறத்திலும் சாமான்களை எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதாக தொடர்ந்து டீசர்களில் குறிப்பிட்டு வருகின்றது.

ஏதெர் Rizta எதிர்பார்ப்புகள் என்ன;-

சந்தையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற 450 வரிசையில் இடம்பெற்றுள்ள பேட்டரி பேக்கை பகிர்ந்து கொள்ளலாம்.
2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும்.
3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 150-160 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்பை வழங்கலாம்.
அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 110-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.
ஏதெர் 450s மாடலில் இடம்பெற்றிருக்கின்ற தொடுதிரை அல்லாத டீப்வியூ டிஸ்பிளே கிளஸ்ட்டரை பெற்றிருக்கலாம்.
பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஏதெர் கனெக்ட் மூலம் பெறக்கூடும்.
சமீபத்தில் வெளியான 450 அபெக்ஸ் மாடலில் இடம்பெற்ற மேஜிக் ட்விஸ்ட் வசதியை பெறுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
USB சார்ஜிங் போர்ட், ரைடிங் மோடு மற்றும் விரைவு சார்ஜிங் வசதியை பெறலாம்.
ஓலா எஸ் 1 புரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக் உள்ளிட்ட மாடல்களை எதிர்க்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *