20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த முஷீர் கான்.. ஷிகர் தவான் பட்டியலில் இணைந்து அசத்தல்!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் 131 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம், தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 300 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை முஷீர் படைத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான முஷீரின் இரண்டாவது சதம் இதுவாகும். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஒரு சதத்திற்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் முஷீர் கான் என்ற சாதனையை படைத்தார். முஷீருக்கு முன் ஷிகர் தவான் இந்த சாதனையை செய்திருந்தார். கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஷிகர் தவான் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

முஷீரின் சகோதரர் சர்ஃப்ராஸ் கான் ஒருநாள் முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வ் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போது கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்தனர். இதன் காரணமாஅ விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2 முதல் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருவரும் விளையாட முடியாது. இந்திய டெஸ்ட் அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சர்ஃப்ராஸ் கான் குடும்பத்தில் இரண்டு நாட்களுக்குள் இரண்டு நல்ல செய்திகள் அமைந்துள்ளது.

அதிக ரன்கள்:

2024 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் முஷீர் கான், நான்கு இன்னிங்ஸ்களில் 81.25 சராசரியுடன் 325 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் முஷீர் கான் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 2 சதம், ஒரு அரசதம் அடித்துள்ளார். முன்னதாக, ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ல், பாகிஸ்தானினி ஷாஜாய்ப் கான் மூன்று இன்னிங்ஸ்களில் 223 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஷிகர் தவானின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் குறைந்தபட்சம் இரண்டு சதங்கள் அடித்த இந்தியாவின் இரண்டாவது பேட்ஸ்மேன் முஷீர். இந்தியாவைப் பொறுத்தவரை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் போது இடது கை அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மூன்று சதங்களை அடித்திருந்தார். இப்போது முஷீருக்கு தவானின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2004 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தவான் அதிகபட்சமாக 505 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், இந்திய அணியால் சாம்பியன் ஆக முடியவில்லை. அரையிறுதியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *