23 ஆண்டுகளுக்கு பின் இளையராஜா-விஜய் கூட்டணி: G.O.A.T ஸ்பெஷல்!

இளைய தளபதி விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிதாக நடிக்க உள்ள படத்திற்கு ‘G.O.A.T.’ aka ‘The Greatest of All Time’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக இசைஞானி இளையராஜாவும்,  விஜயும் பாடல் ஒன்றைப் பாட உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் இளையராஜா உடன் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இணைகிறார்.

விஜயின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் ஆன காதலுக்கு மரியாதை மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா.

இந்த இரு படங்களின் பாடல்களும் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக காதலுக்கு மரியாதை படத்தில் வரும்,  என்னை தாலாட்ட வருவாளா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் எவர்கிரீன் சாங்காக உள்ளது.

அதேபோல் பிரண்ட்ஸ் படத்தில் சங்கர் மகாதேவன்,  ஹரிஹரன்,  எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோரை ஒன்றிணைத்து குயிலுக்கு கூ கூ என கூப்பிட சொல்லிக் கொடுப்போம் என்ற பாடலை பாட வைத்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இந்த இரு படங்களையும் மலையாள இயக்குனர் சித்திக் இயக்கி இருந்தார். இதில் காதலுக்கு மரியாதை 1997லும்,  பிரண்ட்ஸ் 2001இல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜா- விஜய்  இணைகின்றனர்.  இது ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *