சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி ஹீரோவுடன் நடிக்கும் த்ரிஷா
பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. தற்போது, அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப், மோகன்லாலின் ராம் படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். தெலுங்கிலும் அவருக்கு கதவுகள் அகலத் திறந்துள்ளன.
லியோவின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வாம்பரா படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க த்ரிவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சங்கராந்திக்கு வெங்கடேஷின் சைந்தவ் திரைப்படம் வெளியானது. இதையடுத்து அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இவரது இயக்கத்தில் F2 – ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன் படத்திலும், அதன் சீக்வெல் F3 படத்திலும் வெங்கடேஷ் நடித்துள்ளார். இது அவர்கள் இணையும் மூன்றாவது படம்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் 2007 ல், ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருல, 2010 ல் வெளியான நமோ வெங்கடேசா படங்களில் கடைசியாக வெங்கடேஷ், த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர். இதில், ஆடவரி மாட்ல அர்த்தலே வேருல படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்தப் படம்தான் தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் யாரடி நீ மோகினியாக எடுக்கப்பட்டது.
சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வெங்கடேஷ் – த்ரிஷா ஜோடி அனில் ரவிபுடி படத்தில் இணைய உள்ளது.