பிளைட்டிலிருந்து இறங்கியதும்! மோடி கேட்ட கேள்வி.. சட்டென ஸ்டாலின் பதில்! அருகிலேயே ரவி.. என்னாச்சு?

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்துள்ளார். திருச்சியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்ற போது..

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்ட கேள்வி கவனம் பெற்றுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

தற்போது திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பீக் ஹவர்ஸில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் 60 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10 போர்டிங் பிரிட்ஜ்கள் இருக்கும். கட்டுப்பாட்டு அறை, துணை உபகரண அறைகள், டெர்மினல் ரேடார், ரேடார் உருவகப்படுத்துதல், ஆட்டோமேஷன் வசதிகள், விஎச்எஃப், ஏஏஐ அலுவலகங்கள் மற்றும் வானிலை ஆய்வு அலுவலகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மோடி வருகை: இந்த நிலையில்தான் இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை புரிந்து உள்ளார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி திருச்சி வந்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க வாய்ப்புகள் உள்ளன . அதற்கு முன்பாக பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு: பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்துள்ளார். திருச்சியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்ற போது.. முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்ட கேள்வி கவனம் பெற்றுள்ளது. முதல்வரை மோடி பார்த்ததும்.. எப்படி இருக்கிறீர்கள்.. உடல்நிலை நன்றாக உள்ளதா? உடல்நிலை இடையில் சரியில்லாமல் இருந்ததே.. இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்து உள்ளார்.

உடனே முதல்வர் ஸ்டாலின் நன்றாக இருப்பதாக பதில் அளித்துள்ளார். அதை தொடர்ந்து மோடியின் உடல்நிலை குறித்தும் விசாரித்து உள்ளார். இந்த சம்பவம் நடந்த போது ஆளுநர் ஆர். என் ரவி உடன் இருந்தார்.

ஆயிரம் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் இப்படி அரசியல் வேறுபாடு இன்றி நடந்துகொண்டது கவனம் பெற்றுள்ளது. இவர்கள் அரசியல் வேறுபாடு இன்றி பேசிக்கொண்டது வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கு முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி சென்றார். ‘புரட்சி கவிஞர்’ பாரதிதாசன் உருவச்சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *