மதிய உணவுக்கு பின் ஆரஞ்சு, லெமன் சாப்பிடும் பழக்கம் இருக்கா? உடனே நிறுத்துங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க..

Citrus Fruits After Meal: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த பழங்களாக கருதப்படுகின்றன.

ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி உடலில் பலவிதமான மாயங்களைப் புரிகின்றன.

இப்பழங்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமம், தலைமுடி போன்றவற்றிற்கும் நன்மைகளை அளிக்கின்றன. தனித்துவமான புளிப்புச் சுவையைக் கொண்ட சிட்ரஸ் பழங்கள் எப்படி நன்மைகளைக் கொண்டுள்ளதோ, அதேப் போல் தீமைகளையும் கொண்டுள்ளது.

அதுவும் சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழங்களை எப்போது சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான் அதன் முழு பலனைப் பெற முடியும். குறிப்பாக சிட்ரஸ் பழங்களை எந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிட்ரஸ் பழங்களை எப்போதுமே மதிய உணவிற்கு பின் அல்லது இரவு உணவிற்கு பின் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அதன் விளைவாக ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது மதிய உணவிற்கு பின் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

செரிமானம் பாதிக்கப்படும்

மதிய உணவிற்கு பின் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், அதில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். அதாவது வயிறு முழுமையாக நிறைந்திருக்கும் சமயத்தில் சிறிதும் இடைவெளி கொடுக்காமல் உடனே சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள அமிலம் செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்தி, நன்மைக்கு பதிலாக தீமையை ஏற்படுத்தும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சாது

மதிய வேளையில் வயிறுமுட்ட உண்ட உடனேயே சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், உண்ட உணவில் உள்ள சத்துக்களை உடலால் உறிஞ்ச முடியாமல் போகும். சிட்ரஸ் பழங்களில் உள்ள டானின்கள், பாலிஃபீனால்கள் மற்றும் ஆக்ஸலேட்டுகள் போன்ற குறிப்பிட்ட கலவைகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். சிட்ரஸ் பழங்களில் ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அவற்றை சரியான நேரத்தில் உட்கொண்டால் தான் நல்ல பலனைப் பெற முடியும்.

இரத்த சர்க்கரை பாதிக்கப்படும்

சிட்ரஸ் பழங்களை மதிய உணவு உண்ட உடனேயே உட்கொண்டால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். அதுவும் சர்க்கரை நோயாளிகள் மதிய உணவுக்கு பின் உட்கொண்டால், சட்டென்று இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த தவறை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

உடல் எடை அதிகரிக்கும்

என்ன தான் சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அந்த சிட்ரஸ் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் அதில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. அதுவும் மதிய உணவுக்கு பின் சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

இரைப்பைக்குடலில் அசௌகரியம்

சிட்ரஸ் பழங்களை மதிய உணவுக்கு பின் உட்கொண்டால், அது சிலருக்கு அதுவும் செரிமான பிரச்சனைகளை ஏற்கனவே கொண்டிருப்பவர்களின் இரைப்பைக்குடலில் அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதுவும் சென்சிடிவ் வயிற்றைக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் வயிறு காலியாக இருக்கும் போதோ, வயிற்று முழுமையாக நிறைந்திருக்கும் போதோ சாப்பிடாமல், வயிறு பாதி காலியாக இருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *