பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ஒன்னுமே தோணல.. சேட்டையை ஆரம்பிச்ச இளையராஜா…
எந்தவொரு படத்தின் வெற்றிக்கும் அப்படத்தில் இடம்பெறும் பாடல்களும் ஒரு முக்கிய காரணமாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது இசையின் மூலம் மக்கள் மனதை ஆக்கிரமித்தவர் இசைஞானி இளையராஜா. இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே மக்களால் மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றன.
எந்த வகையான நிகழ்ச்சிகள் என்றாலும் சரி இவரின் பாடல்கள் ஒலிக்காத நிகழ்ச்சிகள் இருக்கவே முடியாது. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைய தொடங்கினார். 80ஸ், 90ஸ் என அனைத்து காலகட்டங்களிலும் தனது இசையால் மக்கள் மனதை கொள்ளையடித்தவர் இசைஞானி.
நடிகர் ராமராஜன் திரையுலகில் வெற்றி பெற அவருக்கு துணை நின்றது இளையராஜாவின் பாடல்களே. கமல், ரஜினி போன்ற பல முன்னணி கதாநாயகர்களுக்கு இசையமைத்து வந்தவர் இளையராஜா. அன்று தொடங்கி இன்று வரையிலும் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் விடுதலை திரைப்படத்தில் இவர் இசையமைத்த வழிநெடுக காட்டு மல்லி பாடம் மக்களால் பெரிதளவில் விரும்பப்பட்டது. ஆனால் இவர் நிஜ வாழ்வில் சற்று ஆணவம் பிடித்தவரும் கூட. தனது பாடல்களின் மூலம் கிராமத்து வாசனையை மக்களிடையே புகுத்தியவர் இவர்.
இவர் பொதுவாக அனைவரையும் ஏளனமாய் பார்ப்பவரும் கூட. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தபோது அது பொன்னியின் செல்வன் படம் மாதிரியே இல்லை என தெரிவித்திருந்தார்.
அதற்கு காரணம் இவர் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை பல முறை படித்ததாகவும் மேலும் அக்கதையில் தான் ஊறி போனதால் இதில் வரும் கதாபாத்த்திரங்கள் தனக்கு பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை எனவுக் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.