பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்… பூர்ணிமா ரவிக்கு அடித்த ஜாக்பார்ட்! அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய தொகையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த பூர்ணிமாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
பிக் பாஸ் பூர்ணிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சர்ச்சையாக விளையாடினாலும் கடைசியில் மிகப்பெரிய தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இவர் தனக்கு கிடைக்கும் சிறுசிறு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு அசத்தி வரும் நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார்.
தற்போது இவரை முதன்மைப்படுத்தி பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்று கூறியுள்ளதுடன், சினிமாவில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை மாற்றிக்கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதாக தனுஷை குறிப்பிட்டார்.
பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்பதுடன், ’ஹீரோயின் மெட்டீரியல்’ என்று சினிமாவில் எதுவும் இல்லை என்றும் ஒரு கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே ஆராத்தி என்கிற சமூக வலைதள தொடர்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.