மீண்டும் ‘பாயும் புலி’.. நினைவுகளை கிளறிய ரஜினிகாந்த்.. அதே புல்லட்டில் மீண்டும் போஸ்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் உள்ள ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு சென்று, அங்கு ‘பாயும் புலி’ படத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட சுசூகி ஆர்வி90 பைக்குடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
1960 முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 20 மோட்டார் சைக்கிள்கள் என தமிழ் சினிமாவின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம். ஏவிஎம் சரவணனின் மகன் எம்.எஸ்.குஹனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டுடியோவில் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் தமிழ் சினிமா ஜாம்பவான்களான கமல்ஹாசன், சிவகுமார், ரஜினிகாந்த் மற்றும் ஏவிஎம் ஸ்டுடியோ குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பாரம்பரியம், சினிமா மற்றும் வரலாற்றின் கலங்கரை விளக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் வாகனங்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோர் படங்களில் அநித்தியர்ந்த ஆடைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்திற்கு ரஜினிகாந்தின் சமீபத்திய வருகை பேசுபொருளாகியுள்ளது. மக்களிடம் நல்ல வவெற்பை பெற்ற ‘பாயும் புலி’ படத்தில் தன்னுடைய நினைவுகளையே நினைவுகூரும் வகையில், , தான் பயன்படுத்திய சுஸுகி RV90, பைக்கின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.