இந்திய அணியுடன் மீண்டும் இணைந்த அஸ்வின்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், அவர் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மருத்துவ அவசரம் காரணமாக வீடு திரும்பிய அவர் அணியில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.