அரச குடும்பத்திற்கு எதிராக கருத்து… சட்டத்தரணிக்கு இரண்டாவது சிறை தண்டனை விதிப்பு

தாய்லாந்து அரச குடும்பத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த குற்றத்திற்காக ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் சட்டத்தரணி ஒருவருக்கு மேலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் சட்டத்தரணி
கடந்த 2021ல் தாய்லாந்து அரச குடும்பம் தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது 39 வயதாகும் மனித உரிமைகள் சட்டத்தரணி Arnon Nampa. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்கு பின்னர், 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அவர் தமக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 2020 ஜூலை மாதம் பேரணி ஒன்றில் அரச குடும்பத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாக கூறி, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் Arnon Nampa மொத்தம் 8 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் அமுலில் இருக்கும் லெஸ்-மெஜஸ்ட் சட்டமானது அரச குடும்பத்தை விமர்சனத்திலிருந்து பாதுகாக்கிறது.
14 வழக்குகளில் இரண்டாவது
மட்டுமின்றி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 15 ஆண்டுகள் வரையில் சிறை விதிக்கவும் அந்த சட்டத்தில் இடமுள்ளது. புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தீர்ப்பானது Arnon Nampa மீது சுமத்தப்பட்டுள்ள 14 வழக்குகளில் இரண்டாவதாகும்.
நீதிமன்ற விசாரணையில் தாம் தவறிழைக்கவில்லை என்றே Arnon Nampa தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தனது வழக்குகளுக்கு ஜாமீன் கோர வேண்டாம் என்று முடிவு செய்து சிறையில் இருந்து வருகிறார்.
மேலும் அவர் தப்பித்து விடுவார் என்ற அடிப்படையில் முந்தைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த நிலையிலேயே Arnon Nampa ஜாமீன் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.