இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையே நோயாளர் விமான சேவை

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் எயார் ஆம்புலன்ஸ் எனப்படும் நோயாளர் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மாலைதீவு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கேப்டன் மொஹமட் அமீன் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் நேற்று(30.01.2024) அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன் பின்னரே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவசர மருத்துவ சிகிச்சை
குறித்த நோயாளர் விமான சேவை எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நோயாளர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதும், விபத்துக்கள், நோய்கள் மற்றும் பிற சுகாதார அவசர நிலைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மாலைதீவு பிரஜைகள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்த சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவு பிரஜைகள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இதுவரைகாலமும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், இலங்கையில் அவசர சிகிச்சையின் தரத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அத்தகைய நோயாளிகளை இலங்கை வைத்தியசாலைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மாலைதீவு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கேப்டன் அமீன் இதன் ​போது கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *