அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் மோதி பற்றி எரிந்த விமானம்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது
குறித்த விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு புளோரிடாவில் நேற்று (9.2.2024) குறித்த விமானம் அவசரமாக தரையிறங்க முயன்ற போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு
அத்துடன், விபத்திற்குள்ளான ஜெட் விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட வேண்டும் என விமானி விபத்துக்கு சற்று முன்னர் கட்டுப்பாட்டு அறையிடம் கோரிக்கை விடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.