Aishwarya Rai: மீண்டும் விவாகரத்து சர்ச்சை… ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன்!

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான அபிஷேக் பச்சன் போட்டோவால், மீண்டும் விவாகரத்து சர்ச்சை வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராயை பிரிந்தாரா அபிஷேக் பச்சன்? உலக அழகியாக சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். 2007ம் ஆண்டில் தன்னை விட 3 வயது குறைவான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை ஐஸ்வர்யா ராய் காதலித்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை குறைத்துவிட்ட ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக மிரட்டியிருந்தார். இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் வெளியான போது சென்னையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக கலந்துகொண்டனர். அதேபோல், மேலும் அம்பானி சர்வதேச பள்ளி விழாவிலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு அபிஷேக் பச்சன் சென்று வந்தார். அமிதாப் பச்சனுடன் அபிஷேக் மட்டுமே சென்று வந்த வீடியோக்கள் வைரலாகின.

இதில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ப்ரோ கபடி லீக் போட்டிகளில் தங்களது ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் மேட்ச் பார்க்க மும்பை சென்றிருந்தனர். அப்போது அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராயும் இருந்தார். ஆனாலும், இருவருமே தனித்தனியாக தான் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் தனது அம்மாவுடன் வசித்து வருகிறாராம்.

மாமனார் அமிதாப் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் நல்ல புரிதல் உள்ளதாகவும், மாமியார் ஜெயா பச்சனால் தான் அபிஷேக் பச்சனுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தங்களது மகளுக்காக இணைந்து வாழ்ந்த அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஜோடி தற்போது பிரிந்துவிடலாம் என முடிவெடுத்து விட்டார்களா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *