அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..
விஜயகாந்த் மறைவு காரணமாக புத்தாண்டுக்கு விஜய்யின் 68வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வராது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு விஜய் ரசிகர்களே நெல்லையில் தளபதியை பார்த்ததே நியூ இயர் ட்ரீட் தான் என கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்காமலே அவர்களை சந்தோஷப்படுத்த ஷார்ப்பா 6 மணிக்கே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
வெறும் GOAT என டைட்டில் டிசைன் செய்தால் கிண்டல் அதிகளவில் இருக்கும் என நினைத்த படக்குழுவினர் முழு அர்த்தத்தையும் டைட்டிலில் வைத்து விட்டனர். The Greatest of All Time என டைட்டில் வைக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பாவம் #WeNeedVidaaMuyarchiUpdate டிரெண்ட் செய்து அழுது கொண்டிருக்கின்றனர் என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மஞ்சத்தண்ணிய ஊத்துங்கடா!.. அருவாளுடன் ரெடியான வெங்கட் பிரபு.. ஆடு ஓடுமா? புளூ சட்டை சேட்டை!..
ஜெயிலர், லியோ, கோட் என முன்னணி நடிகர்கள் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித் தொடர்ந்து வெளிநாட்டில் ஷூட்டிங் செய்தாலும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக வலிமை, துணிவு, விடாமுயற்சி என தமிழில் தலைப்பு வைத்து வருகின்றார் என அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் மனதை தேற்றிக் கொண்டாலும் ரசிகர்கள் கொண்டாட ஒரு சின்ன அப்டேட்டையாவது இயக்குநர் மகிழ் திருமேனி அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டால் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்
.அட்லீஸ்ட் அந்த ஆன்போர்ட் அறிவிப்பையாவது வெளியிடலாமே என ஏற்கனவே லீக்கான திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் அப்டேட்டையாவது அதிகாரப்பூர்வமாக கேட்டு வருகின்றனர். ஆனால், துணிவு போல வெறித்தனமான ஒரு படத்தை அஜித் தனது ரசிகர்களுக்காக அதிரடியாக உருவாக்கி வருகிறார். பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் லுக் வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
இதையும் படிங்க: சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா