Ajith Kumar – அஜித் குமாரின் AK 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறாரா?.. உண்மை என்ன?

சென்னை: அஜித் குமாரின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், வில்லனாக அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்கையும் ஆரவ் போட்டோவாக வெளியிட்டு இருந்தார்.

கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவியது. இந்நிலையில், அதுகுறித்த விளக்கத்தை பிரசாந்த் நீல் தரப்பு கூறியுள்ளது.

ஓடிடியில் மாஸ் காட்டும் சலார்: பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் சலார் ஓடிடி ரிலீஸ் டிரெண்டாகி இருந்த நிலையில், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கப் போவதாக திடீரென தகவல்கள் தீயாக பரவின.

அஜித் படத்தை இயக்குகிறாரா பிரசாந்த் நீல்?: மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் வரும் மார்ச் மாதத்துடன் அந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்கப் போவதாக கூறுகின்றனர். அதன் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்க உள்ள அஜித் குமார் அதன் பின்னர் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் கிளம்பின.

உண்மை என்ன?: இயக்குநர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 படங்களை மட்டுமே இப்போதைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தென்னிந்தியாவில் மற்ற எந்தவொரு முன்னணி நடிகர் படத்தையும் இயக்க அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என அவரது டீம் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் அஜித் குமாரை பிரசாந்த் நீல் இயக்கப்போவதாக வெளியான தகவல் வெறும் உருட்டு மட்டுமே என்று கூறுகின்றனர்.

300 கோடி சம்பளம்: சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு 303 கோடி ரூபாய் சம்பளம் அடுத்த படத்திற்கு கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுவும் வதந்தி தான் என்றும் அஜித்தின் ஹேட்டர்கள் சமீப காலமாக அஜித் பெயரில் தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருவதாக கூறுகின்றனர். நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை முடித்து விட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது மட்டுமே தற்போது உறுதியான தகவலாக இருக்கிறது. ஆனால், அஜித்தின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *