Ajith – இப்போ 100 கோடி ரூபாய் சம்பளம்.. 10 வருடங்களுக்கு முன் அஜித்தின் சம்பளம் இவ்வளவுதானா?

அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்கால இயக்குநர்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து விடாமுயற்சி படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்துகொண்டனர். சூழல் இப்படி இருக்க அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் திரைத்துறையில் முணுமுணுப்பு எழுந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இருந்தாலும் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அதனை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் திரைத்துறையினர். நேர்கொண்ட பார்வையில் நடித்தபோது அஜித்துடன் ஆதிக்கிற்கு நல்ல பழக்கம் ஏற்பட்டதாகவும்; அதனைத் தொடர்ந்து அவர் சொன்ன கதையை அஜித் ஓகே செய்துவிட்டாராம். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சம்பளம்: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். இன்னும் ஒரே ஒரு படத்தில்தான் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. விஜய் ஒதுங்கிய பிறகு அஜித்தான் கோலிவுட்டை ரூல் செய்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் அவரது சம்பளம் அநியாயத்துக்கு உயரலாம் என்றும் திரை ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். தற்போது நடித்துவரும் விடாமுயற்சி படத்துக்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன்: அதேபோல் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஒருதரப்பினர் கூறுகின்றார்கள். இந்நிலையில் 11 வருடங்களுக்கு முன்பு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படமான ஆரம்பம் படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்துக்கு 18 கோடி ரூபாய்தான் சம்பளமாக வாங்கினார் என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. 11 வருடங்களுக்கு அஜித்தின் சம்பளம் கிட்டத்தட்ட 87 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *