ஐய்யோ! மீண்டும் மீண்டுமா.. சுந்தர் பிச்சை திடீர் பணிநீக்க முடிவால் டெக் ஊழியர்கள் பீதி..!
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் கடந்த வருடம் கொத்துக் கொத்தாக 12,000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், 2024 ஆம் ஆண்டிலும் புதிதாகப் பணிநீக்கம் செய்துள்ளது கூகுள்.
இதன் மூலம் ஒட்டுமொத்த டெக் சேவை துறையும் அதிர்ச்சியில் உள்ளது.கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் அதிகமான ஊழியர்களை டிஜிட்டல் அசிஸ்டென்ட், ஹார்ட்வேர், இன்ஜினியிரிங் அணிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கூகுள் நிர்வாகம் தொடர்ந்து செலவின குறைப்பில் ஈடுபடுவதாக அறிவித்து இந்தப் புதிய பணிநீக்கத்தைச் செய்துள்ளது. தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வாய்ஸ் மூலம் செயல்படும் கூகுள் அசிஸ்டென்ட் சேவை பிரிவில் பணியாற்றியவர்களும், ஆக்மென்டெட் ரியாலிட்டி பிரிவின் வன்பொருள் அணியின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர்.இதேபோல் கூகுள் நிறுவனத்தின் சென்டரல் இன்ஜினியரிங் பிரிவில் இருக்கும் அதிகாரிகளும் பணிநீக்கத்தை எதிர்கொண்டு உள்ளனர். இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தில் செயல்படும் அணிகளின் எண்ணிக்கை, அணி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு மேம்பட்ட அணியாக மாறி செயல்திறன் அதிகரிக்க உள்ளது எனக் கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதேபோல் மேலும் சில அணிகள் ஆய்வுகளைச் செய்து வருவதால் கூடுதலான பணிநீக்கங்கள் அடுத்தச் சில மாதங்களில் உலகளவில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அமேசான் சில முக்கியப் பிரிவில் இருந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, இதனால் டெக் ஊழியர்கள் சற்றுப் பீதியில் தான் உள்ளனர்.கூகுள் பே, பேடிஎம், போன் பே பயன்படுத்துறீங்களா..? முதல்ல இதை தெரிஞ்சுகோங்க..!! டிசம்பர் 12 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஆல் ஹேன்ஸ் மீட்டிங் ஆடியோ லீக் ஆனது அனைவருக்கும் நினைவிருக்கும், இந்தக் கூட்டத்தில் சுந்தர் பிச்சை முதல் பெரும் பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.இதில் ஒரு ஊழியர் பணிநீக்கம் குறித்த கேள்விக்குச் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தால் மிகக் கடினமான முடிவாகும், 25 வருடத்தில் இப்படியொரு நடவடிக்கையை எடுத்தது இல்லை, ஆனால் அவசியமானதாக இருந்தது.