அலெர்ட்! உங்க EPF அக்கவுண்ட் மூடப்படும் அபாயம்? – இதை உடனே பண்ணுங்க!

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கு ரிட்டயர்மென்ட் பலன்களை வழங்கக்கூடிய எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தை தற்போது எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) கண்காணித்து வருகிறது.

EPF திட்டத்தில் பதிவு செய்யக்கூடிய ஒவ்வொரு EPFO மெம்பருக்கும் 12 இலக்க எண்ணான யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் அல்லது UAN வழங்கப்படுகிறது. UAN என்பது பேலன்ஸை பாஸ்புக்கில் அப்டேட் செய்வது, அட்வான்ஸ் வித்ட்ராயல்கள் மற்றும் ஓய்வுக்கு பிறகு கிடைக்கக்கூடிய செட்டில்மெண்ட் போன்ற அனைத்து EPF செயல்பாடுகளுக்கும் அவசியமாக கருதப்படுகிறது. PF தொகை என்பது ஓய்வுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய விலை மதிப்பில்லாத ஒரு சொத்து என்றாலும் கூட, வேலை செய்யாத வருடங்களில் ஏற்படக்கூடிய அனைத்து செலவுகளையும் சமாளிப்பதற்கு அது போதுமானதாக இருக்காது. அதே நேரத்தில், உங்களது EPF அக்கவுண்ட் ஆட்டோமேட்டிக்காக மூடிவிடலாம் மற்றும் இதனால் உங்களது சேவிங்ஸ் தொகையை வித்ட்ரா செய்வதில் இருந்து உங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களது EPF அக்கவுண்ட் எப்போது மூடப்படலாம்.?

ஒருவேளை உங்களது பழைய நிறுவனம் மூடப்பட்டு, உங்களது EPF தொகையை புதிய நிறுவனத்தின் அக்கவுண்டிற்கு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யவில்லை என்றாலோ அல்லது உங்களது EPF அக்கவுண்டில் 36 மாதங்களுக்கு நீங்கள் எந்தவிதமான ட்ரான்ஸாக்ஷன்களையும் செய்யவில்லை என்றாலோ உங்களது EPF அக்கவுண்ட் ஆட்டோமேட்டிக்காக 3 வருடங்களுக்கு பிறகு மூடப்படும்.

அதுமட்டுமல்லாமல் உங்களது பணத்தை வித்ட்ரா செய்வதற்கு நீங்கள் பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். எனினும் ஒரு பேங்க் KYC மூலமாக உங்களது சேமிப்பு தொகையை நீங்கள் வித்ட்ரா செய்து கொள்ளலாம். குறிப்பாக, இன்ஆக்டிவாக இருக்கக்கூடிய இந்த அக்கவுண்டிலும் உங்களுக்கான வட்டித் தொகையை தொடர்ந்து பெறுவீர்கள்.

அக்கவுண்டை யார் வெரிஃபை செய்வார்கள்?

இன்ஆக்டிவ் PF அக்கவுண்ட் தொடர்புடைய ஒரு கிளைமை பூர்த்தி செய்வதற்கு தனிநபரின் எம்ப்ளாயர் அந்த கிளைமை அங்கீகரிக்க வேண்டும். எனினும், எம்ப்ளாயி நிறுவனம் மூடப்பட்டு கிளைமை அங்கீகரிப்பதற்கு யாரும் இல்லை என்ற பட்சத்தில், KYC ஆவணங்களுடன் வங்கி கிளைமை அங்கீகரிக்கும்.

KYC டாக்குமெண்ட்கள்

பின்வரும் KYC ஆவணங்கள் வெரிஃபிகேஷனிற்கு அவசியமாக கருதப்படுகிறது: PAN கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ESI அடையாள அட்டை, மற்றும் ஓட்டுநர் உரிமம். கூடுதலாக, ஆதார் போன்ற அரசு வழங்கிய அடையாள அட்டையையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொகையானது 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அசிஸ்டன்ட் பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷனரின் அங்கீகாரத்திற்கு பிறகு பணத்தை வித்ட்ரா அல்லது ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். அதேபோல தொகையானது 25,000 ரூபாய்க்கும் அதிகமாக மற்றும் 50,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் ஃபண்டு ட்ரான்ஸ்பர் அல்லது வித்ட்ராயலை அக்கவுண்ட் அதிகாரியே அங்கீகரிப்பார். தொகை 25,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் அங்கீகரிக்கும் செயல்முறையை அசிஸ்டன்ட் செய்வார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *