பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்: பகவந்த் மான் உறுதி
சண்டிகர்: பஞ்சாபில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் (13 தொகுதிகள்) வெற்றி பெறுவோம் என எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய அகில இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
மாநில முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், “லோக்சபா தேர்தலில், பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்.
13 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட வேண்டும்,” என்றார்.
அகில இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் சில கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.இந்நிலையில், பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பகவந்த்மான் அறிவித்திருப்பது அகில இந்திய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.