இதனால மொத்த இந்தியாவுக்கே பெருமைங்க!! மேட்-இன்-இந்தியா வாகனம் இந்தோனேசியாவில்… விலை தான் கொஞ்சம் அதிகம்!
2024 மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) இந்தோனேஷியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள ஜிம்னி உடன் ஒப்பிடுகையில் இந்தோனேஷிய ஜிம்னி எந்த அளவிற்கு வித்தியாசமானது என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் தலைநகர் ஜகர்தாவில் 2024 இந்தோனேஷியா சர்வதேச மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சுஸுகி நிறுவனம் தனது பல்வேறு விதமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளது. அவற்றுள் ஒன்று, 5-டோர் ஜிம்னி ஆகும். இந்தியாவில் விற்பனையில் இருப்பது 5-டோர் ஜிம்னி ஆகும்.
இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.10.74 லட்சமாக உள்ளது. ஆனால், இந்தோனேஷியாவில் 44.39 கோடி இந்தோனேஷியன் ரூபியாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.23.6 லட்சம் ஆகும். அதாவது, நம் நாட்டில் உள்ள விலையை காட்டிலும் டபுள் விலையில் ஜிம்னி இந்தோனேஷியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
2024 இந்தோனேஷியா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் கேண்டி சிவப்பு நிறத்தில் ஜிம்னி வாகனம் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. வாகனத்தின் மேற்கூரை அடர் நீலம் கலந்த கருப்பு நிறத்தில் உள்ளது. இந்தியாவிலும் இவ்வாறான சிவப்பு நிறத்தில் ஜிம்னி கிடைக்கிறது. இந்தியாவில் இந்த சிவப்பு நிறத்தை சிஸிலிங் சிவப்பு என மாருதி சுஸுகி நிறுவனம் அழைக்கிறது.
3 கதவுகளை கொண்ட ஜிம்னி வாகனங்கள் இந்தியாவில் ஹரியானா மாநிலத்திலும், ஜப்பானிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், 5 கதவுகளை கொண்ட ஜிம்னி வாகனங்கள் இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆதலால், தற்போது இந்தோனேஷிய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 5-டோர் ஜிம்னி வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் 5-டோர் ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாட்டிற்கும் மேட்-இன்-இந்தியா ஜிம்னி வாகனங்கள் தான் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இனி இந்தோனேஷியாவுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஜிம்னியில் அடாஸ் (ADAS) வழங்கப்படவில்லை. வாகனத்தை ஓட்டுவதற்கு சவுகரியத்தையும், விபத்துகளை குறைக்கும் விதமாகவும் இன்றைய கால கார்களில் பரவலாக அடாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இவ்வளவு அதிக விலையில் இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்பட உள்ள ஜிம்னியில் இல்லை. இந்தோனேஷியாவில் 3-டோர் ஜிம்னி வாகனமும் விற்பனையில் உள்ளது. 3-டோர் ஜிம்னியை வைத்திருப்பவர்கள் தங்களது வாகனத்தை 5-டோருக்கு அந்த நாட்டில் மாற்றிக் கொள்ளவும் சுஸுகி வழிவகை செய்துள்ளது. இதற்கு சுஸுகி நிர்ணயித்துள்ள கட்டண தொகை ரூ.1 லட்சம் ஆகும்.
இந்தியாவில் பொருத்தப்படும் அதே 1.5 லிட்டர் கே15பி 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் தான் இந்தோனேஷியாவிலும் ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்தோனேஷியாவில் ஜிம்னியில் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் வழங்கப்பட்டுள்ளது.