இந்த தலைமுறையின் மொத்த வீரர்களையும்.. ஃபிட்டாக மாற்றியவரே கிங் கோலி தான்.. முன்னாள் வீரர் பாராட்டு

நிறைவு பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 வருடங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அதில் ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட்டானாலும் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரிலும் சேர்த்து அடித்து நொறுக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்து தரத்தை காண்பித்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்து 2வது போட்டியில் 29 ரன்களில் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியில் டக் அவுட்டானர். ஆனால் 3வது போட்டியில் முக்கியமான நேரத்தில் கரீம் ஜானத் அடித்த சிக்சரை பவுண்டரி எல்லையில் பும்ரா போல காற்றில் தாவி பறந்து தடுத்த அவர் ரன்னிங்கிலேயே கேட்ச் பிடித்து சூப்பர் ஓவரில் முக்கிய ரன் அவுட் செய்தார்.

ஃபிட்டாக மாற்றியவர்:
அந்த வகையில் தன்னுடைய அற்புதமான ஃபிட்னஸை பயன்படுத்தி ஃபீல்டிங் துறையில் கில்லியாக செயல்பட்ட விராட் கோலி அப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். சொல்லப்போனால் விராட் கோலியின் ஃபீல்டிங் காரணமாகவே அப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மனதார பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த தலைமுறையில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விராட் கோலி தான் ஃபிட்டாக மாற்றியதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். அதாவது தற்போதுள்ள அனைத்து வீரர்களும் விராட் கோலியை போல் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவர் ஃபிட்னஸில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *