இந்த உரிமை எல்லாம் தூத்துக்குடியில் மட்டும்தான்..கனிமொழிகிட்டதான் நடக்கும்! நெகிழ வைத்த சம்பவம்! ஆஹா

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்பி கனிமொழி மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை ஒன்று கவனம் பெற்றுள்ளது. அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் தமிழ்நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் தொடர்ந்து அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்னும் அங்கே வெள்ளம் முழுமையாக விடியவில்லை. ஒரு சில இடங்களில் 10 அடிக்கு கூட வெள்ளம் இன்னமும் உள்ளது.

அமைச்சர்கள் சென்றனர்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு ஏற்கனவே சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டார். அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நெல்லைக்கு சென்று அங்கே மீட்பு பணிகளை செய்தார்.

கனிமொழி வந்தார்: இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி புயல் அன்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அவர் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக இருந்த கனிமொழி அவசரமாக தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கே சாலைகளில் தேங்கி இருக்கும் வெள்ளத்தை பார்வையிட்டார். சாலையில் வெள்ளம் தேங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இப்போதும் விடாமல் அவர் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். ஒன்றரை வாரம் ஆகியும் கூட அவர் களத்திலேயே இருக்கிறார்.

சுவாரசிய சம்பவம்: தூத்துக்குடியில் எம்பி கனிமொழி மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை ஒன்று கவனம் பெற்றுள்ளது. அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கனிமொழியை அப்பகுதி பெண்கள் தங்கள் வீட்டிற்கு கையை பிடித்து உரிமையாக அழைத்து சென்றனர்.

பல பெண்கள் சேர்ந்து உரிமையாக அவரின் கையை பிடித்து அழைத்து சென்றனர். கனிமொழியின் இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். உடனே இழப்பீடு உங்களுக்கு கொடுக்கப்படும். தண்ணீர் இறங்கி வருகிறது.. விரைவில் எல்லாம் சரி செய்யப்படும் என்று, கனிமொழி அந்த வீடியோவில் கூறியது கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

அதிர்ச்சி சம்பவம்: மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.

அதில், நாங்கள் மீட்க சென்ற போது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை, மழை வெள்ள எச்சரிக்கைகள் வர தொடங்கியதும், நாங்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்கச் செல்ல முயற்சித்தபோது, அவர்கள் வர மறுத்துவிட்டனர். எங்கள் மூதாதையர்கள் காலத்திலிருந்தே இங்கு வெள்ளம் வந்ததில்லை, இங்கிருந்து கிளம்புங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆகாது என்றார்கள். ஆனால் அப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது என்று மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *