டெலிவரிக்கு வரவங்க எல்லாம் இனி இந்த ஸ்கூட்டர்ல தான் வரப்போறாங்க! பார்க்கவே வித்தியாசமா இருக்குதுல்ல?

குவார்கோஸ் என்ற நிறுவனம் தற்போது உலகின் முதல் கார்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரை தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. விரைவில் சோதனை கட்டங்கள் எல்லாம் முடிந்து இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் உள்ளவர்களுக்கு. இது பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது இந்தியாவில் லாஸ்ட் மைல் டெலிவரி தொழில் பெருகி வருகிறது. இந்த தொழிலில் அதிகமாக டூவீலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் பி2பி ரக ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் அதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதில் குறிப்பிட்ட குறைந்த அளவில் லோடுகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.

தற்போது உள்ள டூவீலர்கள் டெலிவரிக்கு எடுத்துச் செல்லும் பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதி கொண்ட டூவீலர்களாக இல்லை. இதனால் லாஸ்ட் மைல் டெலிவரி தொழிலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சிரமம் இருந்து வருகிறது. இதையெல்லாம் யோசித்த குவார்கோஸ் என்ற புனேவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாக கார்கோ டூவீலர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது இந்நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் கார்கோ ஸ்கூட்டர் என்பது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார்போ ஸ்கூட்டரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல டசால்ட் என்ற நிறுவனம் தான் வடிவமைத்து வழங்கியுள்ளது. அதை தான் இந்நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது இந்த எலெக்ட்ரிக் கார்கோ ஸ்கூட்டர் பல்வேறு பகுதியில் டெஸ்ட் செய்யப்படுவதை நம்மால் காண முடிகிறது.

இந்த எலெக்ட்ரிக் கார்கோ ஸ்கூட்டர் தான் உலகின் முதல் எலெக்ட்ரிக் கார்கோ ஸ்கூட்டராக இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 6.1 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக 3.4 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 6 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குவார்கோஸ் எலெக்ட்ரிக் கார்கோ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 145 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இதில் பொருட்களை வைத்து செல்ல 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார்கோ கம்பார்ட்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 120 கிலோ எடை கொண்ட பொருட்களையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய நம் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வகையிலான ஏசி பவர் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 15 நிமிடம் ஆகிறது. இதற்கான டிசி சார்ஜிங் தொழில்நுட்பமும் இருக்கிறது. இதை பயன்படுத்தினால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3 மணி நேரத்திலேயே சார்ஜ் செய்து விட முடியும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏரோ டைனமிக் முறையில் வடிவமைப்பதற்காகவே டசால்ட் நிறுவனம் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் குவார்கோஸ் நிறுவனத்திற்கு உதவி செய்துள்ளது. இதன் படி இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். இதனால் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இதன் டிராக்ஷன் குறைவாக இருக்கும் அதனால் அதிகமான ரேஞ்ச் செல்ல முடிகிறது.

தற்போது உள்ள சாதாரண டூவீலர்களில் சுமார் 35 பாசங்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. குவார்கோஸ் கார்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இது 70 பார்சல்களாக உயர்த்த வாய்ப்புள்ளது. சுமார் 120 கிலோ எடை வரை எடுத்துச் செல்ல முடியும் . அதாவது ஒரு பார்சலுக்கு 1.7 கிலோ வரை சராசரி எடை வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

மளிகை சாமான்களை எடுத்துச் செல்ல இந்த கூட்டத்தை பயன்படுத்தினால் தற்போது உள்ள டூவீலர்களில் எடுத்துச் செல்லும் அளவைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுள்ள மளிகை சாமான்களை எடுத்துச் செல்ல முடியும். அதிக அளவு எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்வதால் இதற்கு தனியாக பெரிய பேட்டரி பேக் வேண்டும் என்ற தேவை இல்லை. தற்போது உள்ள பேட்டரி பேக்கிலேயே சிறப்பான மைலேஜ் தரும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பார்சல்களை எடுத்து செல்ல சுலபமாக இருக்கும் வகையில் தனித்தனியான கம்பார்ட்மெண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பார்சல்களை தேடிப் பிடிப்பது என்பது எளிதாக இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கம்பார்ட்மெண்டுகளை லாக் செய்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் பைக்கை நிறுத்திவிட்டு பார்சலை கொண்டு டெலிவரி செய்து விட்டு வரும் வகையில் அதை யாரும் திருடி விடாதபடி பாதுகாப்பாக வைக்க முடியும்.

குவார்கோஸ் நிறுவனம் தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறது வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இதை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் பொதுவெளியில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இதற்கான புத்திகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 2 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெறும் 250 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது இதற்கான டிமாண்டுகள் அதிகமாகும் போது இதன் தயாரிப்புத் திறன் அதிகப்படுத்தப்பட்டு 2025-ம் ஆண்டு 12,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் படி இதன் திறன் அதிகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *