ஹூண்டாய் கிரெட்டா N-line பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி மாடலின் அடிப்படையில் பெர்ஃபாமென்ஸ் ரக கிரெட்டா N-line விற்பனைக்கு மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.50,000-ரூ.80,000 வரை விலை கூடுதலாக ரூ.21 லட்சத்துக்குள் துவங்கலாம்.
சந்தையில் 10,00,000க்கு அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கிரெட்டா இந்தியாவின் முதன்மையான நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான நியூ கிரெட்டா முன்பதிவு எண்ணிக்கை 60,000 கடந்துள்ளதை தொடர்ந்து புதியதாக வரவுள்ள கிரெட்டா என்-லைன் மாடலின் விளம்பரப் படப்பிடிப்பு படங்கள் சில வாரங்களுக்கு முன்பாக வெளியானது
கிரெட்டா என்-லைன் பற்றி எதிர்பார்ப்புகள் என்ன:
டாப் கிரெட்டா வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற உள்ளது.
ப்ளூ மற்றும் கிரே நிறத்திலான கார்பன் ஸ்டீல் என இரு நிறங்கள் பெற உள்ளது.
முற்றிலும் மாறுபட்ட கிரில் மற்றும் பம்பரினை முன்புறத்ததில் கொண்டுள்ளது.
பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் புதிய N பேட்ஜ் பெற்ற 18 அங்குல அலாய் வீல் உள்ளது.
இன்டிரியரின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் கருமை நிறத்துக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக இருக்கைகளின் தையல் நூல், கியர் செலக்டர், கதவு இன்ஷர்ட்டுகள் என பல்வேறு இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
பின்புற பம்பர் அமைப்பு புதுப்பிக்கப்பட்ட N-line பேட்ஜ் ஆனது பெறக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்குள் முன்பதிவு துவங்கப்பட உள்ள கிரெட்டா என்-லைன் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.