கட்டா குஸ்தி இயக்குனருடன் கூட்டணி அமைத்த நடிகர் விஷ்ணு விஷால்
சென்னை: கட்டா குஸ்தி இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்துள்ளார் . இந்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இப்படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.