ஃபஸ்ஸினோவையும், வெஸ்பாவையும் சேர்த்து வச்சு செஞ்ச சிலை (ஸ்கூட்டர்).. ஹோண்டா தயாரித்த ஸ்கூட்டரா இது!

ஃபஸ்ஸினோ (Fascino)வையும், வெஸ்பா (Vespa) ஸ்கூட்டரையும் சேர்த்து வைத்து தயாரித்ததைப் போன்ற ஓர் ஸ்கூட்டரை ஹோண்டா (Honda) தற்போது ஓர் 160 சிசி (160CC) ஸ்கூட்டரை தயாரித்து இருக்கின்றது. இதையே தற்போது அது வெளியீடும் செய்திருக்கின்றது. எந்த நாட்டில் ஹோண்டா அதை வெளியீடு செய்திருக்கின்றது? இந்தியாவில் அது விற்பனைக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா? வாங்க இதுகுறித்த முழு விபரத்தையும் பார்க்கலாம்.

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) ஓர் புதுமுக 160 சிசி ஸ்கூட்டர் (160CC Scooter)-ஐ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றது. அது இரு வேறு பிராண்டுகளின் பிரபலமான ஸ்கூட்டர்களை பிரதிபலிக்கும் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

ஹோண்டா ஸ்டைலோ 160 (Stylo 160) எனும் ஸ்கூட்டரையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இன்றைய இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கிலேயே இந்த வாகனத்தை ஹோண்டா ரெடி செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே மாடர்னான தோற்றத்தை அதற்கு ஹோண்டா வழங்கி இருக்கின்றது. முக்கியமாக 160 சிசி திறன் கொண்ட வாகனமாக அதனை வடிவமைத்திருக்கின்றது.

இந்தியாவில் இப்போதே 125 சிசி ஸ்கூட்டர்கள் கலாச்சாரம் தலையெடுக்க தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இது இந்தியாவிற்கான டூ-வீலர் அல்ல. இந்த வாகனத்தை ஹோண்டா நிறுவனம் இந்தோனேசியாவிற்காகவே தயார் செய்திருக்கின்றது. இது இந்தியாவிற்கு விற்பனைக்கு வருமா என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த வாகனம் பார்க்கதான் யமஹாவின் ஃபஸ்ஸினோவையும், வெஸ்பா ஸ்கூட்டரையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. ஆனால், ஸ்டைலோ 160-யை மற்ற ஸ்கூட்டர்களிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக புதிய மற்றும் தரமான அம்சங்களையும், கட்டுமஸ்தான பாடி பேனல்களையும் ஹோண்டா ஸ்டைலோ 160இல் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், குரோம் பூச்சால் அலங்கரிக்கப்பட்ட பேனல் கொண்ட தனித்துவமான ஹெட்லைட், வித்தியாசமான இன்டிகேட்டர் அமைப்பு, உடல் நிறத்திலான சைடு வியூவ் மிர்ரர், மாற்று வண்ணத்திலான இருக்கை, வாத்தின் பின்புறத்தைப் போன்ற டெயில் பகுதி போன்றவற்றால் ஸ்டைலோ 160 மிகவும் ஸ்டைலான வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

இதோ ஓர் நியோ ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் ஆகும். இதில் ஹோண்டா ஏடிவி 160 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 16 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் சிறப்பம்சங்களும் மிக அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றது.

உதாரணமாக இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் எல்இடி தர லைட்டுகள் ஆகும். ஹெட்லைட், டிஆர்எல், மற்றும் டெயில் லைட் அனைத்தும் எல்இடி லைட்டே ஆகும். இத்துடன், சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ஆப்ஷன், அலாய் வீல், கலர்ஃபுல் ரியர் வியூவ் மிர்ரர், ரிமோட் கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஸ்மார்ட் சாவி, ரப்பர் ஸ்டாண்டு பேட், டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் இது ஆக்டிவாவிற்கே போட்டியளிக்கும் வகையில் விற்பனையாகக் கூடும் என எதிர்பார்கப்படுகின்றது. ஹோண்டா ஸ்டைலோ 160 சிசி நல்ல மைலேஜையும் வழங்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 45 கிமீட்டராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *