வியக்க வைக்கும் அயோத்தி ராமர் கோவில் : இரும்பே இல்லாம கட்டப்பட்டுள்ள கோவில்..!
அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் இக்கோவில் மொத்தம் சுமார் 2.7 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் 57,400 சதுர அடியில் இந்த ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இந்த கோவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் மொத்தம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோவில் அழகாக மட்டுமின்றி பாரம்பரிய முறையிலும் கட்டப்பட்டு உள்ளது. ஆம் இந்த கோவில் பல தலைமுறைகளை கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக இன்று (22.01.2024) நடைப்பெறுகிறது. இந்த திறப்பு விழாவில் பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த அயோத்தி ராமர் கோவில் (Ayothi Ramar kovil) கட்டுமானம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் கோவிலின் கட்டுமானத்திற்கு இருப்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டுமானத்திற்கு இஸ்ரோ கட்டுமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அயோத்தி ராமர் கோயிலானது வட இந்திய கோயில் வடிவமைப்புகளின் படி கட்டப்பட்டுள்ளதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தவில்லை (Ramar Kovil Construction Without Steel) என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இரும்பின் ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் தான் என்பதால் பல வருடங்களுக்கு கோயில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்க்காக இரும்பு பயன்படுத்தாமல் கோயில் கட்டப்பட்டுள்ளதாக சந்திரகாந்த் சோம்புரா கூறுகிறார்.
மேலும் இந்த கோயிலானது முழுவதுமாக கிரானைட் மற்றும் பளிங்குகற்கள், மணற்கற்கள் போன்றவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கட்டுமானத்தில் (Ayothi Ramar Kovil Kattamaippu) இரும்பு மட்டுமின்றி சிமென்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற எந்தப் பொருளும் பயன்படுத்தபடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கோயில் இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் தான் கட்டப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2,500 ஆண்டுகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதையும் தாங்கும் வகையிலேயே இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ராமர் கோவில் பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.