0.45 வினாடியில் ரோஹித் சர்மா பிடித்த அற்புதமான கேட்ச்… வைரலாகும் பிசிசிஐ வீடியோ
0.45 வினாடியில் ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்று நாட்களிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
https://twitter.com/BCCI/status/1754371312737538390
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் 209 ரன்களுடன் முதல் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் சேர்க்க, 2 ஆவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சதத்துடன் 255 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
இதையடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் 23 ரன்கள் எடுத்திருந்தபோது அஷ்வின் வீசிய பந்தில் முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த கேட்ச்சை பிடிப்பதற்கு ரோஹித் சர்மா 0.45 வினாடி மட்டுமே எடுத்துக் கொண்டார். முதலில் பந்தை அவர் தவற விட்டு விடுவார் என்பது போல் தோன்றியது. ஆனாலும் 2 கைகளையும் பின்னே கொண்டு சென்று இந்த கேட்ச்சை அற்புதமாக பிடித்தார் ரோஹித் சர்மா. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த கேட்ச் தொடர்பான வீடியோ ஒன்று கவனம் பெற்றுள்ளது.