புடலங்காய் வைத்து அசத்தலான ரெசிபி: சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அம்புட்டு ருசியா இருக்கும்
செம்ம சுவையான புடலங்காய் விதையல் செய்து பாருங்க. வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் நல்லெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
3 பூண்டு
1 கொத்து கருவேப்பிலை
இளம் புடலங்காய் சதை மற்றும் விதை 1 கப்
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு தேவையான அளவு
பெருங்காயம்
¼ கப் தண்ணீர்
புளி சிறிய அளவு
½ கப் தேங்காய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் உளுந்தம் பருப்பு, பூண்டு சேர்த்து கிளரவும். நிறம் மாறியதும், 1 கொத்து கருவேப்பிலை, இளம் புடலங்காய் சதை மற்றும் விதைகளை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து சிறிய அளவு புளி, தேங்காய் , தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுக்கவும்.