அசத்தல்… ரூ200க்கு ஹெச்பிவி தடுப்பூசி மூலம் 4 வகையான புற்றுநோய்கள் அபாயம் குறையும்… விரைவில் இந்தியாவில்… !
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் குறைக்கும் முயற்சியாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை மட்டுமல்ல, ஆண்குறி புற்றுநோய், குத புற்றுநோய் மற்றும் ஓரோபார்ஞ்சீயல் புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது என ரவி மெஹ்ரோத்ரா கூறுகிறார். இந்த ஒரே ஒரு தடுப்பூசியைப் போட்டால், 4 வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
2008 இல், இந்த தடுப்பூசி ஸ்காட்லாந்தில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு பரிசோதனை முறையில் வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் 25 முதல் 30 வயது வரை உள்ள நிலையில் அனைத்து சிறுமிகளும் இதுவரை ஆரோக்கியமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 100% நேர்மறையான முடிவுகள் கிடைத்த முதல் அறிக்கை இதுவாகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் தடுப்பூசி, CERVAVAC, 200-400 ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் போடப்படும்.
SII ஆல் உருவாக்கப்பட்ட CERVAVAC இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் தெரிவித்துள்ளார். இதே வகையான வெளிநாட்டு தடுப்பூசி ரூ 2000 முதல் ரூ 4000 வரை இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக இலவசமாக தடுப்பூசி போடப்படும். பின்னர், 9 வயது சிறுமிகளுக்கான அரசின் வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் HPV தடுப்பூசி சேர்க்கப்படும்.