அம்பானி பாவம் டா டேய்.. Jio-வை சல்லி சல்லியா நொறுக்கிய BSNL.. அதே விலைக்கு 395 நாட்கள்.. தினமும் 3GB டேட்டா!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அறிவித்துள்ள 2024 நியூ இயர் ஆஃபரை சல்லி சல்லியாக நொறுக்கும் ஒரு திட்டம் ஏற்கனவே பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் உள்ளது. அதென்ன திட்டம்? அதன் நன்மைகள் என்ன? அதெப்படி ஜியோவின் புத்தாண்டு சலுகையை காலி செய்கிறது? இதோ விவரங்கள்:

அதென்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றித்தான். ஜியோவின் 2024 நியூ இயர் ஆஃபர் (New Year Offer 2024) அறிவிக்கப்பட்டுள்ளதும் இதேபோன்ற விலை நிர்ணயம் கொண்ட.. ஜியோவின் ரூ.2999 திட்டத்தின் மீது தான்!

ஜியோவின் ரூ.2999 ரீசார்ஜ் மீது புத்தாண்டு சலுகையாக 24 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டி (24 Days Extra Validity) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது வழக்கமான 365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் சேர்த்து கூடுதலாக கிடைக்கும் 24 நாட்களுடன் சேர்த்து மொத்தம் 389 நாட்கள் (Total 389 Days) செல்லுபடியாகும்.

இந்த இடத்தில் தான் பிஎஸ்என்எல்-ன் ரூ.2999 ரீசார்ஜ் “மாஸ் ஆக” என்ட்ரி கொடுக்கிறது. இந்த திட்டம் எந்த விதமான கூடுதல் சலுகையும் இல்லாமலேயே 395 நாட்கள் வேலிடிட்டி (395 Days) உடன் வருகிறது. அதாவது இந்த திட்டம் கிட்டத்தட்ட 13 மாதங்கள் செல்லுபடியாகும். அதுமட்டுமல்ல இது ஜியோவின் ரூ.2999-ஐ விட அதிகமான டெய்லி டேட்டாவையும் (Daily Data) வழங்குகிறது.

ஜியோவின் ரூ.2999 ரீசார்ஜ் டெய்லி 2.5ஜிபி டேட்டாவை (2.5GB Daily Data) வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல்-ன் ரூ.2999 ரீசார்ஜ் டெய்லி 3ஜிபி டேட்டாவை (3GB Daily Data) வழங்குகிறது. ஒப்பீட்டளவில் மட்டுமே பிஎஸ்என்எல், ஜியோவை விட அதிகமான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இன்டர்நெட் ஸ்பீட் என்று வந்துவிட்டால் 4ஜி / 5ஜி ஸ்பீடை வழங்கும் ஜியோவே வெல்லும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜியோ ரூ.2999-ன் மற்ற நன்மைகள்: 2.5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் வேகம் 64 கேபிபிஎஸ் (64Kbps) ஆக குறைக்கப்படும். அதாவது உங்களுக்கு “அன்லிமிடெட் 4ஜி டேட்டா” கிடைக்கும்; ஆனால் இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்கும். கூடவே உங்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மையும் கிடைக்கும்.

இதுதவிர்த்து ஹோம் மற்றும் ரோமிங்கில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் (Unlimited Voice Calls) கிடைக்கும். மேலும் தினமும் 100 நேஷனல் எஸ்எம்எஸ்களும் இலவசமாக கிடைக்கும். கடைசியாக பெரும்பாலான ஜியோ ரீசார்ஜ்களின் வழியாக ஜியோ ஆப்ஸ் (Jio Apps) தொகுப்பின் இலவச சந்தாவும் ரூ.2999-ன் கீழ் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2999-ன் மற்ற நன்மைகள்: இதன்கீழ் 3ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.1999 மற்றும் ரூ.2399 க்கு மேலும் இரண்டு லாங் வேலிடிட்டி திட்டங்கள் (Long Validity Plans) உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தின் நன்மைகள்: இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் மொத்தம் 600ஜிபி டேட்டாவை வழங்குகிறது (டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 40கேபிபிஎஸ் வேகம்). கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், இலவச பிஆர்பிடி (PRBT) போன்ற நன்மைகளை வழங்குகிறது, மேலும் லோக்துன் கன்டென்ட், ஈரோஸ் நவ் போன்ற பொழுதுபோக்கு சேவைகளையும் வழங்குகிறது .

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டத்தின் நன்மைகள்: இது 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது (டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 40கேபிபிஎஸ் வேகம்). கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 30 நாட்களுக்கான லோக்துன் கன்டென்ட் மற்றும் ஈரோஸ் நவ் சந்தாவை வழங்குகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *