களைகட்ட தொடங்கியது அம்பானி வீட்டு திருமணம்! வெளியானது Pre-Wedding புகைப்படங்கள்

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அம்பானி மகன் திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

1995 -ம் ஆண்டு பிறந்த ஆனந்த் அம்பானி Reliance Industries Ltd -ன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். மேலும், தாயார் நீடா அம்பானியுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியையும் வழிநடத்துவதோடு, ஜியோ இயக்குநராகவும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1994 -ம் ஆண்டு பிறந்த ராதிகா மெர்ச்சன்ட் தந்தையின் மருந்து நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானின் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இடையே ரோகா நிகழ்வு நடைபெற்றது. பின்னர், இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

‘லகன் லக்வான்’ விழா
இந்நிலையில், நேற்று இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவானது, ஆசீர்வாதத்தை பெறும் அடையாளமாக ‘கன்கோத்ரி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த விழாவில் உள்ள புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பலரும் அம்பானி வீட்டின் pre-wedding ஷூட் ஆரம்பித்துவிட்டு என்று கூறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *