பந்தளம் அரச குடும்பத்தில் அம்பிகா தம்புராட்டி காலமானார்… 11 நாட்கள் தர்மசாஸ்தா கோவில் மூடல்… !

ந்தளம் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பிகா தம்புராட்டி. இவர் இன்று அதிகாலை காலமானார் . இவருக்கு வயது 76. இதன் காரணமாக்பந்தளம் அரண்மனை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் 11 நாட்களுக்கு மூடப்படும்.

ஜனவரி 17ம் தேதி புதன்கிழமை கோவில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கைப்புழா தெகேமுரி அரண்மனையில் வாழ்ந்த லட்சுமி தம்புராட்டி மற்றும்கத்தியகோல் சங்கரநாராயணன் நம்பூதிரி ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் மாவேலிக்கரை அரண்மனையில் நந்தகுமார் வர்மா. இவர்களுடைய மகள் அம்பிகா வர்மா.

அத்துடன் மகர ஜோதிக்காக சபரிமலை சன்னிதானத்திற்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த சமயத்தில் அரச குடும்பத்தினர் யாரும் அதில் பங்கேற்க மாட்டார்கள். அதே நேரத்தில் திருவாபரணங்கள் சபரிமலை செல்வதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பந்தள அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *