வித்தியாசமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மத போதகரின் மனைவியான எலிசபெத் சென்னட்டைக் கொலை செய்ததற்காக கென்னத் ஸ்மித்-என்பவருக்கு 1989-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கூலிப்படையாக செயல்பட்டு ஆயிரம் டாலர்களுக்காக அவர் இந்தக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து 1996-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர், இறுதியாக உச்சநீதிமன்றத்தையும் அணுகினார். ஆனால் அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் 2022-ஆம் ஆண்டு விஷ ஊசி மூலம் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடலில் ரசாயனத்தை செலுத்த சரியான நரம்பை கண்டறிய இயலாததால் அந்த மரண தண்டனை உத்தரவு காலாவதியானது.

இதனைத்தொடர்ந்து அலபாமா சிறை நிர்வாகம் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்தது. அதன்படி ஸ்மித்தின் முகத்தில் காற்று புகாத முகமூடியை மாட்டி, அதன் மூலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி சுவாசிக்க வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆக்சிஜன் இல்லாமல் உடலில் நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முறையை அலபாமா சிறை நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. இவ்வகையான மரண தண்டனை முறையை அமெரிக்க அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. மரண தண்டனை தகவல் மையத்தின்படி, உலகில் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் ஸ்மித் ஆவார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *